ETV Bharat / sitara

கூட்டத்தில் விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்!

author img

By

Published : Sep 26, 2020, 5:57 PM IST

பாடகர் எஸ்.பி.பி. இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், கூட்டத்தில் விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்தார்.

விஜய்
விஜய்

உடல்நலக்குறைவு காரணமாக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப். 25) சென்னையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு நடிகர், நடிகைகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது, ரசிகர்கள் பலரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் காலணி கீழே விழுந்தது.

எஸ்.பி.பி இறுதி அஞ்சலியில்  விஜய்
எஸ்.பி.பி. இறுதி அஞ்சலியில் விஜய்

அப்போது விஜய் உடனே தனது கையால் அந்தக் காலணியை எடுத்து ரசிகரிடம் கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

இதையும் படிங்க: ’மண்ணுக்குள் புதையுமோ பால் நிலா; பாடும் நிலா’ - பார்த்திபன் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.