ETV Bharat / sitara

'ரஜினிகாந்தை வாழ்த்துவோம், தமிழ்நாட்டில் மேலும் கலைஞர்கள் திகழ்கிறார்கள் என்பதையும்  காட்டுவோம்'- வைரமுத்து ட்வீட்

author img

By

Published : Oct 27, 2021, 9:26 AM IST

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிகாந்திற்கு, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரம், “பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” எனவும் கூறியுள்ளார்.

ரஜினி
ரஜினி

இந்தியத் திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் விருதுகளில் ஒன்று தாதா சாகேப் பால்கே. 2019 ஆம் ஆண்டிற்கான இந்த விருது நடிகர் ரஜினிகாந்திற்கு திங்கள்கிழமை (அக்.25) வழங்கப்பட்டது.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிகாந்திற்கு வழங்கினார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விருது வென்ற ரஜினிகாந்திற்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதவி ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், "பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம்.

  • பால்கே விருது பெற்றதில்
    கலை உலகுக்கே
    பெருமை சேர்த்துள்ளார்
    நண்பர் ரஜினிகாந்த்.
    ஊர்கூடி வாழ்த்துவோம்.

    கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
    பால்கே விருதுக்குத்
    தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
    மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
    ஒன்றிய அரசின்
    கண்களுக்குக் காட்டுவோம். pic.twitter.com/6v5uwWueAq

    — வைரமுத்து (@Vairamuthu) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் பிறந்தநாள் இன்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.