ETV Bharat / sitara

ஆர்ஆர்ஆர் முதல் நாளில் ரூ.223 கோடி வசூல்!

author img

By

Published : Mar 26, 2022, 7:10 PM IST

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.223 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர்
ஆர்ஆர்ஆர்

ஹைதராபாத் : ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஆர்ஆர்ஆர் திரையரங்குகளில் மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளிலே வசூலில் அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது.

RRR smashes records: Day 1 business crosses 223 crore as Rajamouli competes with himself
ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்

இந்த நிலையில், படத்தின் வசூல் குறித்து பிரபல விநியோகஸ்தர் தாரன் ஆதர்ஸ் ட்விட்டரில், ஆர்ஆர்ஆர் முதல் நாளில் ஆந்திராவில் ரூ.75 கோடி, தெலங்கானாவில் ரூ.27.5 கோடி, கர்நாடகாவில் ரூ.14.5 கோடி, தமிழ்நாட்டில் ரூ.10 கோடி, கேரளத்தில் ரூ.4 கோடி, வடஇந்திய மாநிலங்களில் ரூ.25 கோடி என நாடு முழுக்க ரூ.156 கோடியும், வெளிநாடுகளில் அமெரிக்கா ரூ.42 கோடி, மற்ற நாடுகளில் ரூ.25 கோடி என மொத்தம் ரூ.223 கோடி வசூலித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.