ETV Bharat / sitara

பிரமாண்டமான முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா

author img

By

Published : Sep 27, 2021, 11:30 AM IST

Updated : Sep 27, 2021, 12:22 PM IST

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

பிரமாண்டமான முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
பிரமாண்டமான முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா

சென்னை: அறிமுக இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், ரியாஸ் கானின் வாரிசும் - நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார்.

படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க ஆண்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரமாண்டமான பொருள்செலவில் தயாரிக்கிறார்.

பிரமாண்டமான முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
பிரமாண்டமான முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா

படத்தைப் பற்றி இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில், ''பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்ஷன் படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தின் உச்சகட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்குப் புதுமையானதாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க: காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்

Last Updated :Sep 27, 2021, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.