ETV Bharat / sitara

இந்தியில் ரீமேக்காகும் 'ஓ மை கடவுளே'

author img

By

Published : Feb 2, 2021, 7:41 PM IST

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' படத்தின் இந்தி ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

oh
oh

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

oh my kadavule
அஷ்வத் மாரிமுத்து ட்வீட்

இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது தெலுங்கில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்க படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படம் இந்தியிலும் ரீமேக்காகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எண்டமால் சைன் இந்தியா, மெர்ரி கோ ரவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 'ஓ மை கடவுளே' இந்தி ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்துவே இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு ரீமேக் பணிகளை முடித்துவிட்டு, இந்தி ரீமேக் பணிகளைத் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் நடிப்பதற்கான கதாபாத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைப்பெற்றுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.