ETV Bharat / sitara

எமியை மிஞ்சுவாரா இங்கிலாந்து நாயகி டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்!

author img

By

Published : Mar 18, 2019, 6:00 PM IST

ராஜூமௌலி இயக்கும் "ஆர்.ஆர்.ஆர்" படத்தில் அறிமுகமாகும் இங்கிலாந்து நாயகி டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் பற்றி சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் எமி ஜாக்சன். தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த எமி ஜாக்சன் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரைத்தொடர்ந்து டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை இயக்குநர் ராஜமெளலி இயக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் அறிமுகமாகிறார்.

இவரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராவார். ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் இரண்டு முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு 'ஆர்.ஆர்.ஆர்' உருவாகி வருகின்றது. 1920-களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்திற்கு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆங்கிலேய பெண் தேவைப்பட்டது.

RRR Movie
டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்

இதனால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடிக்க இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸை ராஜமெளலி ஒப்பந்தம் செய்துள்ளார்.
இப்படத்தில் டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அவரைப்பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளன. டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் 2018-ல் உருவான பான்ட்ஸ் லைப் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளிவரவில்லை. தனது 14 வயதில் பிரிட்டன் தேசிய இளைஞர் நாடகக் குழுவில் சேர்ந்த டெய்ஸி, வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ், கோல்ட் பீட், அவுட் நம்பர்ட், சைலன்ட் விட்னஸ் உள்ளிட்ட டி.வி சீரியல்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

உட்ஹவுஸ் கல்லூரியில் நாடகக்கலை படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், ஐரிஷ், ஸ்காட்டிஷ் மக்கள் பேசும் ஆங்கிலம் மொழியை கச்சிதமாக உச்சரித்து பேசும் வல்லமை கொண்டவராம். ஆகையால்தான் இயக்குநர் ராஜமெளலி இவரை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.