ETV Bharat / sitara

பிரபுதேவா 'முசாசி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

author img

By

Published : Feb 17, 2022, 9:18 PM IST

பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகிவரும் 'முசாசி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபுதேவா 'முசாசி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
பிரபுதேவா 'முசாசி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவருகிறார் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'தேள்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் திரைப்படத்தில் பிரபுதேவா நடித்துவருகிறார். மாஸ்டர் மகேந்திரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 'முசாசி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜாய் ஃபிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (பிப்ரவரி 17) மாலை வெளியிட்டுள்ளார். பிரபு தேவா கையில் கம்பியுடன் கோபமாக நடந்துவரும் இந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச பெருமையைப் பெற்ற 'ஒத்த செருப்பு சைஸ் 7'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.