ETV Bharat / sitara

நினைவை தொலைத்து கனவில் தேடும் 'குதிரைவால்' டீசர் வெளியீடு!

author img

By

Published : Oct 22, 2020, 11:37 PM IST

சென்னை: கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

குதிரைவால்
குதிரைவால்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

இவற்றைத் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த திரைப்படம் 'குதிரைவால்'. கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து இன்று (அக்டோபர் 22) இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

குதிரைவால் பட போஸ்டர்
குதிரைவால் பட போஸ்டர்
இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.திரைப்படத்திற்கு ராஜேஷ் கதை எழுதியிருக்கிறார். உளவியல் சிக்கல்கள், ஆழ்மனக் கற்பனைகள், டைம் டிராவல் ஆகியவை குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இத்திரைப்படம் இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.