ETV Bharat / sitara

அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் - கமல் ட்வீட்

author img

By

Published : Mar 25, 2020, 4:27 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு தனது வீட்டை எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கியுள்ளதாக கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

kamal
kamal

கரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, நாட்டு மக்களிடையே நேற்று (மார்ச் 24) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முற்றிலும் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று குறித்து சமூகவலைதளத்தில் பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றன. கரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக இரண்டு காணொலிகளை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

  • இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
    உங்கள் நான்

    — Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது, தனது வீட்டை மருத்துவ மையமாக்கி இருக்கிறார் மக்கள் நீத மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.