ETV Bharat / sitara

'கமல்ஹாசனின் ரத்தக் கண்ணீர்!' - வைரலாகும் புதிய வீடியோ

author img

By

Published : May 18, 2019, 11:40 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ, பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.

கமல்ஹாசன்

அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை வெட்டவேண்டும் என்று சாடியிருந்தார். இதனைத்தொடர்ந்து கமலின் சர்ச்சை பேச்சுக்கு கருத்து தெரிவித்த மோடி 'இந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது' என்றும் தெரிவித்தார்.

தற்போது, இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சே தீவிரவாதியா? இந்துவா என்ற ஆராய்ச்சி, சமூக வலைதளங்களிலும், அரசியல் களத்திலும் நடந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் காளியப்பனும் ஒருவர். அவர் மாதச் சம்பளம் வாங்க சென்றபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என்று கூறும் கமலின் குரல் உடைகிறது.

கமல்ஹாசன்

தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசும் கமல்ஹாசன் கண்ணீர்விட்டு அழும் அவரது தங்கைக்கு ஆறுதல் கூறுவதும், நெஞ்சைக் கிழிக்கும் காளியப்பன் தங்கையின் கேள்வியும் வீடியோவில் இடம்பெறுகிறது. இதையடுத்து, நடிகரும், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'பார்த்தீங்களா இந்தக் கோர சம்பவம் நெஞ்சை அடைக்கிறது. இந்த சம்பவத்திற்கு துளிகூட காரணம் இல்லை என்று நினைத்துக் கொண்டு உங்களிடம் ஓட்டு பிச்சைக் கேட்டு வருகிறார்கள். அந்த சுயநல அரசியல்வாதிகளை தூக்கியெறிந்து மாற்றத்துக்கு விதையிடுங்கள். துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை என்ன செய்யலாம் என்று மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார். பிக்பாஸில் ரசிகர்களைப் பார்த்து கேள்விகளை கேட்பது போல் கண்களை உயர்த்தி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வாக்கு கேட்பது சூசகமாக இந்தக் வீடியோவினை பார்க்கும்பொழுதே தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Intro:Body:

Following this, Kamal says in the video that he does not have an answer to their right question, and that the people must answer with the election results. He also attacked that the people behind sterlite shootout shamelessly campaign and meet people for votes now.Finally, the video ends with a new TV being fixed, and Kamal says,  just like he broke the TV earlier (in the earlier video) and has changed it, on May 23, TN people must change the government. 



<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">நான் பரப்புரை செய்ய  எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு  நன்றி. இதோ என் பரப்புரை  தமிழ்நாடு காண.... <a href="https://t.co/MsEsNQbhLB">pic.twitter.com/MsEsNQbhLB</a></p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1129332755139928064?ref_src=twsrc%5Etfw">May 17, 2019</a></blockquote>

<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.