ETV Bharat / sitara

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து கரோனா விழிப்புணர்வு - 'ஆர்ஆர்ஆர்' குழு வெளியிட்ட வீடியோ

author img

By

Published : Mar 17, 2020, 2:46 PM IST

Updated : Mar 17, 2020, 4:48 PM IST

தெலுங்கு நடிகர்களான ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை வழங்கியுள்ளனர்.

Junior NTR and Ram Charan Corona awareness video
Junior NTR and Ram Charan come together for a COVID19

ஹைதராபாத்: 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இணைந்து நடிக்கும் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கியுள்ளனர்.

பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கும் வரலாற்றுப் படமான ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருவதைத் தொடர்ந்து, திரைப்பிரபலங்களும் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் அத்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களான ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளது, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இருவரும் இணைந்து உலக சுகதார அமைப்பு கூறும் ஆலோசனைகள் அனைத்தையும் பின்பற்றுமாறு கூறுகின்றனர். தும்மல், இருமல் வரும்போது எவ்வாறு கைகளை மூக்கில் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டும், கைகளை குலுக்காமல் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பல விஷயங்களை ஆந்திரா, தெலங்கானா மாநிலம் முழுவதும் இருக்கும் தெலுங்கு பேசும் மக்களுக்கு புரியும் வண்ணம் தெலுங்கில் விவரித்தனர்.

  • The world is going through one of its hardest times. The only way to get past #COVID19 is not panicking and spreading awareness.

    Stay Hygienic. Stay Safe! pic.twitter.com/UMHnLmdkA8

    — RRR Movie (@RRRMovie) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அத்துடன் வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்களை சரியானதா என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு அறிவறுத்தினர். மேலும் இதுபோன்ற தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகு மற்றவர்களுக்கு பகிருமாறு தெரிவித்தனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்த இருநடிகர்களும் தற்போது தோன்றியிருப்பதால் இவர்களின் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

Last Updated :Mar 17, 2020, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.