ETV Bharat / sitara

கரோனா தொற்றுக்கு ஆளான ஜூனியர் என்.டி.ஆர்!

author img

By

Published : May 10, 2021, 4:48 PM IST

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Jr NTR
Jr NTR

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது ராம் சரணுடன் இணைந்து 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • I’ve tested positive for Covid19. Plz don’t worry,I’m doing absolutely fine. My family & I have isolated ourselves & we’re following all protocols under the supervision of doctors. I request those who’ve come into contact with me over the last few days to pl get tested. Stay safe

    — Jr NTR (@tarak9999) May 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. கவலைப்படாதீர்கள், நான் நலமாக இருக்கிறேன். என் குடும்பத்தினரும் நானும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம்.

கடந்த சில நாள்களாக என்னுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என ஜூனியர் என்.டி.ஆர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர். கரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வர, திரைப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.