ETV Bharat / sitara

#HBDHANSIKA பிறந்தநாள் விழா கொண்டாடும் குட்டி குஷ்பு

author img

By

Published : Aug 9, 2021, 12:13 PM IST

Updated : Aug 9, 2021, 12:20 PM IST

ரசிகர்களால் குட்டி குஷ்பு என அன்போடு அழைக்கப்படும் ஹன்சிகா இன்று (ஆக 09) தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

குட்டி குஷ்பு
குட்டி குஷ்பு

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகும் நபர்கள், பின்பு சினிமாவில் வெற்றி பெறும் நபர்களாக மாறுவது வழக்கம்.

அந்தவகையில் 'ஷகலக பூம் பூம்' தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா இன்று திரைத்துறையில் கொடிக் கட்டி பறந்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார்.

50 படங்கள் நிறைவு

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் நடித்துவரும் ஹன்சிகா தற்போது 50 படங்களை நடித்து முடித்துள்ளார். அவரது 50ஆவது படமான, 'மஹா' படம் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இருப்பினும் சற்றும் தளராமல் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா.

ஹன்சிகா
ஹன்சிகா

படத்தில் நடிக்க ஆரம்பித்த புதிதில் உடல் எடை சற்று அதிகம் இருந்ததால், குட்டி குஷ்பு என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ஹன்சிகாவின் உதவி

குட்டி குஷ்பு
குட்டி குஷ்பு

ஹன்சிகா படங்களில் நடிப்பது மட்டுமின்றி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், ஏழை குழந்தைகளின் கல்விக்கும் தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார்.

குட்டி குஷ்பு பிறந்தநாள்

குட்டி குஷ்பு
குட்டி குஷ்பு

அவர் இன்று தனது 30ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் காலை முதல் ரசிகர்கள், திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி #HBDHANSIKA என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இதையும் படிங்க: ஷில்பா ஷெட்டிக்கு என் வேலை பிடித்திருக்கிறது - நடிகை ஷெர்லின் சோப்ரா

Last Updated : Aug 9, 2021, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.