ETV Bharat / sitara

'தமிழ் பேசும் இந்தியன்’ டி-சர்ட் அணிந்த வெற்றிமாறன் - வைரலான புகைப்படம்!

author img

By

Published : Sep 8, 2020, 5:44 PM IST

சென்னை : இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் 'தமிழ் பேசும் இந்தியன்’ டி-சர்ட் அணிந்த தமிழ் திரையுலகின் முன்னணி திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

'தமிழ் பேசும் இந்தியன்’ டிசர்ட் அணிந்த வெற்றிமாறன் - வைரல் வைரலான  புகைப்படம் !
'தமிழ் பேசும் இந்தியன்’ டிசர்ட் அணிந்த வெற்றிமாறன் - வைரல் வைரலான புகைப்படம் !

’ஹிந்தி தெரியாது போடா’ மற்றும் ’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ என்ற வாசகங்கள் பொறித்த டி-சர்ட்டை திரைப்பட நடிகர், நடிகைகள் அணிந்து, அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சந்தனு பாக்கியராஜ், அவரது மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் இந்த டி-சர்ட் அணிந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலானது. இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவுகளும், சிலர் தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்தன.

இப்படி உடை அணிந்தால் இந்தி அழிந்துவிடுமா அல்லது தமிழ் வளர்ந்துவிடுமா என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருவது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி உள்ளது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் திடீரென தனது மகனுடன் ’ஐ யம் தமிழ் பேசும் இந்தியன்’ என்ற டி-சர்ட் அணிந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.