ETV Bharat / sitara

நடிகை சரோஜா தேவியை சந்தித்த விஷால்!

author img

By

Published : Nov 19, 2021, 12:27 PM IST

v
v

பெங்களுரூ: நடிகர் விஷால் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியை அவரது இல்லத்தில் வைத்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரின் மறைவு பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமாரின் மறைவுக்குப் பின் அவரது நினைவிடத்திற்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

v
சரோஜா தேவியைச் சந்தித்த விஷால்

அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவரது வீட்டிற்குச் சென்று புனித்தின் சகோதரான நடிகர் சிவா ராஜ்குமாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

மேலும் புனித் ராஜ்குமார் தனது சொந்த செலவில் படிக்க வைத்துக்கொண்டிருந்த குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

v
சரோஜா தேவியைச் சந்தித்த விஷால்

புனித்துக்கு அஞ்சலி செலுத்த பெங்களூரு சென்ற விஷால், அதன்பின் அங்கிருந்து பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரை விஷால் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதையும் படிங்க: வீடு முக்கியம் இல்ல... புனித்திற்காக விஷால் செய்த செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.