ETV Bharat / sitara

ஷுட்டிங் இல்லாட்டி பரவாயில்லை, இருக்கவே இருக்கு பஜ்ஜி சுடும் வேலை? சூரி மாஸ்டர் அவதாரம்

author img

By

Published : Feb 11, 2020, 2:19 PM IST

நடிக்க அழைக்காவிட்டால் பரவாயில்லை தனக்கு வேறொரு வேலை இருக்கிறது என்பதை குறிப்பிடும் விதமாக ஷுட்டிங் பிரேக் இடையே பஜ்ஜி மாஸ்டராக மாறியுள்ளார் நடிகர் சூரி.

Soori preparing Bajji
Actor soori preparing Bajji

சென்னை: படப்பிடிப்பு இடைவேளயில் சுடச்சுட பஜ்ஜி சுட்ட விடியோவை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூரி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து படப்பிடிப்புக்கிடையே சுடச்சுடச் பஜ்ஜி சுட்டு சாப்பிட்டுள்ளார் நடிகர் சூரி. பஜ்ஜி மாஸ்டரிடம் கரண்டியை வாங்கி பஜ்ஜி சுட்டு எடுக்கும் விடியோவை பகிர்ந்துள்ள அவர், 'ஷுட்டிங்குக்கு தன்னை கூப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, தனக்கு பஜ்ஜி வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதில், #southindianactor #southindianfood #southindiancinema என்ற ஹேஷ்டாக்குகளை டேக் செய்துள்ளார்.

பூக்கள் டிசைனுடன் கூடிய சட்டை, ஒரு பக்கம் கருப்பு மறு பக்கம் வெள்ளை நிறம் கொண்ட வேஷ்டி அணிந்து அச்சு அசல் பஜ்ஜி மாஸ்டராக விடியோவில் தோற்றமளிக்கிறார்.

சூரியின் இந்த விடியோவுக்கு பதில் தரும் விதமாக ரசிகர் ஒருவர், மற்றொரு படப்பிடிப்பில் இதேபோல் தோசை மாஸ்டரை அருகில் நிற்க வைத்து, சூரி வளைத்து வளைத்து தோசை சுடும் விடியோ பகிர்ந்திருக்கிறார்.

  • திரு.சூரி அண்ணன் படப்பிடிப்பின் இடைவெளியில்.. pic.twitter.com/9z2DEjllF8

    — gunasekaran (@mounamguna) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'வென்னிலா கபடி குழு' படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார் சூரி. இதையடுத்து பஜ்ஜி, தோசை என சாப்பாடு விஷயங்கள் மூலம் அவ்வப்போது வைரலாகி வருகிறார்.

Intro:Body:

Actor Soori turn as master Soori preparing bajji Soori preparing food Soori cooking மாஸ்டராக மாறிய சூரி பஜ்ஜி சுட்ட சூரி ஷுட்டிங் இடையே பஜ்ஜி சுட்ட சூரி ஷுட்டிங் ஸ்பாட்டில் சூரி சமையல்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.