ETV Bharat / sitara

பிரசாந்தின் 'அந்தகன்' படப்பிடிப்பு நிறைவு!

author img

By

Published : Jul 30, 2021, 6:29 PM IST

சென்னை: பிரசாந்த் நடிப்பில் உருவாகி வந்த 'அந்தகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

prasanth
prasanth

பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'அந்தாதூன்'. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி, தனது மகன் பிரசாந்தை வைத்து 'அந்தகன்' என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் முக்கியமான சில காட்சிகள் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 'அந்தகன்' படத்தை இந்தாண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.