ETV Bharat / sitara

திடீரென்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றிய ஜீவா - ஏன் தெரியுமா?

author img

By

Published : Mar 29, 2020, 12:55 PM IST

நடிகர் ஜீவா, கரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.

திடீரென்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றிய ஜீவா
திடீரென்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றிய ஜீவா

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்துவருகிறது. மிரட்டும் கரோனா வைரசால் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், சிலர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றித்திரிகின்றனர். வெளியில் ஊர் சுற்றும் மக்களை, காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டிவருகின்றனர். மேலும் திரைத் துறையினர் பலரும் மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து-வருகின்றனர்.

திடீரென்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றிய ஜீவா
திடீரென்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றிய ஜீவா

இந்நிலையில் நடிகர் ஜீவா, கரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புர்ணவு ஏற்படுத்தும்வகையில் ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளார். ட்விட்டர் கணக்கில் அவரது பெயரை 'உள்ளே போ' என்று மாற்றியிருக்கிறார். ஜீவாவின் இந்தப் புதிய முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: படப்பிடிப்பு ரத்து: ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா நம்பியார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.