ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை: சக நடிகர், நடிகைகள் கோரிக்கை

author img

By

Published : Jun 24, 2020, 5:59 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நடிகர் சேகர் சுமனும் நடிகை ரூபா கங்குலியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் திரைத்துறையினர் இடமும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாது, பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் பற்றியும் விரிவாக விவாதிக்கத் தொடங்கியது. சுஷாந்த்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்; அது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, எனப் பார்க்காமல் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகர் சேகர் சுமன் தனது ட்விட்டர் பக்கத்தில்,' #JusticeforSushantforum என்ற ஹஷ்டேக்கை உருவாக்குகிறேன். சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும், இந்த வகையான கொடுஞ்செயலுக்கு எதிராக அவர்களின் குரல்களை எழுப்பவும் பயன்படும். நம்பிக்கை இழக்காமல் பொறுமையாக இருங்கள். என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.

இவரைப்போலவே நடிகையும் மக்களவை உறுப்பினருமான ரூபா கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், '#cbiforsushant என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, சுஷாந்தின் மரணம் தற்கொலை என்று நம்ப முடியவில்லை. அதன் பின்னால் இருக்கும் உண்மைகளை சிபிஐ ஆழமாக விசாரிக்க வேண்டும். இவரது மரணம் தற்கொலை என்று கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள்' என ட்வீட் செய்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.