ETV Bharat / sitara

அங்கீகாரம் அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி! - அமிதாப் பச்சன்

author img

By

Published : Dec 31, 2019, 10:40 AM IST

திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதைப் பெற்றுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியுடன் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Amitabh Bachchan
Amitabh Bachchan

திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்று முன்தினம் (டிச. 29) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சனுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், அணில் கபூர், கரன் ஜோஹர், அர்ஜுன் கபூர், மூத்த பின்னணிப் பாடகி லதா மகேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விருது வழங்கி கவுரவித்தமைக்காக அமிதாப் பச்சன் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "இந்த அங்கீகாரம் அளித்து கவுரவித்தமைக்காக மகத்தான இந்திய நாட்டின் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!

Intro:Body:

Tweet Today: Farah seeks blessings from Archbishop, Big B extends gratitude to countrymen


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.