ETV Bharat / science-and-technology

டீல் ஓகே... எலான் மஸ்க் கையில் ட்விட்டர்... பயனர்கள் குஷி...

author img

By

Published : Apr 25, 2022, 4:20 PM IST

Updated : Apr 26, 2022, 9:21 AM IST

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விற்பது தொடர்பாக அந்நிறுவனக் குழு எலான் மஸ்க்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

twitter-in-talks-with-musk-over-bid-to-buy-platform
twitter-in-talks-with-musk-over-bid-to-buy-platform

சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லாவின் முதன்மைச் செயல் அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை முழுமையாக விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கிய மஸ்க், 100 விழுக்காடு பங்குகளையும் வாங்க விருப்பம் தெரிவித்தார்.

அந்த வகையில், ஒரு பங்கை 54.20 டாலருக்கும், மொத்த பங்கை 41 பில்லியன் டாலருக்கும் வாங்க முன்வந்துள்ளார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இந்த நிலையில், ட்விட்டரை விற்பது தொடர்பாக அந்நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழு எலான் மஸ்கிடம் இன்று (ஏப். 25) பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் உடன்பாடு ஏற்பாட்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க காரணம் என்ன..?

தனது ட்விட்டர் கணக்கில் 8.3 கோடி ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள மஸ்க் ட்விட்டரில் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடிவதில்லை என்று கருத்து தெரிவித்துவருகிறார். இந்த சூழலிலேயே, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கியிருந்தார். இதுகுறித்து அவர், "நான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை.

பயனர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க அங்கீகாரம் அளிப்பதற்காக வாங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். இதனை ட்விட்டர் பயனர்கள் கொண்டாடிவருகின்றனர். இதனிடையே அமெரிக்க நாளிதழ்கள், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினால், அதில் குறிப்பிட்ட மாற்றங்களையெல்லாம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டன.

அதைத்தொடர்ந்து, அமெரிக்க சாஃப்ட்வேர் டெவலப்பரான பிரணாய் பாத்தோல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியப் பிறகு இந்த மாற்றங்களேயே செய்வார் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு மஸ்க்கும் ‘ஆமாம்’ என்று பதிலளித்து, பயனர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவை பின்வருமாறு.

  • கருத்து சுதந்திரம்:

பயனர்களுக்கு கருத்து சுதந்திரம் அளிக்கும் வகையில் ட்விட்டரை மாற்றுதல். சர்ச்சைக்குரிய ட்விட்டர் பயனர்களின் கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்காமல், தற்காலிகத் தடை விதித்தலை கொண்டுவருதல்.

  • எடிட் அம்சம்:

பயனர்கள் ட்விட்டரில் ஒரு பதிவை வெளிட்டப்பின்பு, அதனை எடிட் செய்ய முடியாது. இதனால், தவறுதலாக பதிவிட்ட ட்வீட்டை அழித்துவிட்டே மறுபடியும் பதிவிடவேண்டியுள்ளது. இதனை மாற்றி எடிட் அம்சம் கொண்டுவருதல்.

ட்விட்டர் கோடு

  • ட்விட்டரில் உள்ள ஸ்கேம் ஐடிக்களை நீக்க நடவடிக்கை எடுத்தல். அதாவது ஒரே பெயரில் பல்வேறு ஐடியை உருவாக்கி பதிவிடுதல், சர்ச்சைக்குரிய பதிவுகளை பரப்புதல் உள்ளிட்டவையை தடுக்க அல்கோரிதம் கொண்டுவருதல். அதோபோல விளம்பரங்களை தவிர்த்தல், ட்விட்டரில் "போல்" நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட மாற்றங்களை செய்தல்.

இதையும் படிங்க: பட்ஜெட் விலையில் 50 எம்பி கேமரா... ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்... மோட்டோ ஜி52 அறிமுகம்...

Last Updated :Apr 26, 2022, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.