ETV Bharat / science-and-technology

Iphone11: புடைத்த மூன்று கேமராக்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

author img

By

Published : Sep 13, 2019, 3:22 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

செப். 10ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ஃபோன் ரகங்களான, ஐபோன்11, ஐபோன் 11 ப்ரோ ஆகியவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து புதிய ஐபோனின் கேமரா குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் செய்துவருகின்றனர்.

Iphone11 camera

பல ஆண்டுகள் காத்திருந்து புதிய தொழில்நுட்பங்களை அனுபவித்த காலம் மாறி, தினம் ஒரு புதிய மாற்றத்தோடும் தொழில்நுட்பத்தோடும் ஸ்மார்ட்ஃபோன் சந்தை வளர்ந்துவருவதைக் கண்டு வருகிறோம். புதிய புதிய பெயர்களுடன் களமிறங்கும் இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களை என்னதான் பயனர்கள் அனுபவித்து வந்தாலும், எதிர்மறை கருத்துகளும் இதனை விடாமல் தொற்றிக்கொள்கிறது.

அதுபோலத்தான் செப்டம்பர் 10ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன்11 ரக ஸ்மார்ட்ஃபோன்கள், இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது ஐபோன்11 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனில் உள்ள மூன்று கேமராக்களின் அமைப்பு புடைத்த வடிவில் உள்ளது. இதனால் நெட்டிசன்கள் அந்த கேமரா அமைப்பை கேலி செய்துவருகின்றனர். மேலும், இந்தக் கேமராவின் அமைப்பு ஒருவித பயத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது என்று கூறும் உளவியல் நிபுணர்கள், இதனை ட்ரைபோஃபோபியா (TRYPOPHOBIA) நோய் என்றும் குறிப்பிடுகின்றனர்.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
ஐபோன் நிகழ்வு 2019

ஐபோன்11 குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் மலாலா. அதில், "ஆப்பிள் நிகழ்வில் வெளியிட்ட ஐபோன் கேமரா, நான் இன்று அணிந்திருக்கும் உடையின் சில நுட்ப வடிவங்களை ஒத்திருக்கிறது. இது எதேச்சையாக நிகழ்ந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பாஜக தொண்டரும் தொழில்நுட்ப வல்லுநருமான விகாஸ் பாண்டே தெரிவிக்கையில், ட்ரைபோஃபோபியா இருக்கும் நண்பர்களுக்கு இது எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளது.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
விகாஸ் பாண்டே ட்வீட்

இது குறித்து ட்விட்டர்வாசிகளின் பதிவுகள்:

பாந்தோம் குறிப்பிடுகையில், 'இது புதிய ஐபோன்11-இன் தேங்காய் பதிப்பு' என்று கிண்டலடித்துள்ளார்.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
பாந்தோம் ட்வீட்

யீட் கூறுகையில், ஆப்பிள் ஐபோன் 11-ஐ நாம் அடுப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
யீட் ட்வீட்

லோப்ஸ்டெர் பதிவில், மிகவும் ஆவலுடன் நான் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் செல்போனை வாங்க எதிர்பார்த்திருக்கிறேன் என்றும் இது அடுப்புடன் வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு என்னிடம் தொற்றியுள்ளது என்று கமெண்ட் அடித்துள்ளார்.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
லோப்ஸ்டெர் ட்வீட்

புத்து தெரிவிக்கையில், தந்தையிடம் நான் ஐபோன் 11 வாங்கித் தரும்படிக் கேட்டேன். ஆனால் கிடைத்தது இதுதான் எனப் பதிவிட்டுள்ளார்.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
புத்து ட்வீட்

ஹியொமோ, 2050இன் ஐபோன் இதுபோலத்தான் இருக்கும் என்று இந்தப் படத்தை ட்வீட் செய்துள்ளார்.

new iPhone 11 Pro camera design  Malala on new iPhone 11 Pro  many trolls triple camera over twitter  trypophobia  மூன்று கேமரா  ஐபோன்11  ஐபோன் 11 ப்ரோ  ஐபோன் ப்ரோ மேக்ஸ்  apple 11  Water Drop / Dew Drop / Tear Drop Displa  தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை  ஐபோன் 11 ப்ரோ
ஹியொமோ ட்வீட்

எது எப்படியோ, நாட்ச் தொடுதிரை (Notch Display) அறிமுகமான சமயத்தில், ‘என்ன... (ஆச்சரியத்துடன்) திரையின் மேல் சிறு துண்டு இருக்காதா..!’ என்று நக்கலடித்த பயனர்கள்தான், இன்று சிறிய நாட்ச் தொடுதிரை (Small Notch Display), தண்ணீர் துளி தொடுதிரை / பனித்துளி தொடுதிரை / கண்ணீர்த் துளி தொடுதிரை (Water Drop / Dew Drop / Tear Drop Display) என்பனவற்றுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

இதன் வெற்றியைக் காலமும், அடுத்து வரும் தகவல் சாதனங்களும்தான் தீர்மானிக்கும் என்பதே டெக் சந்தையின் யதார்த்தம்.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.