ETV Bharat / opinion

Karnataka Election: ஹிமாச்சல் பாணியில் ஆட்சியை இழக்கும் அபாயம்.. கர்நாடாக பாஜகவில் நடப்பது என்ன?

author img

By

Published : Apr 18, 2023, 9:20 AM IST

கர்நாடகா அரசியலை இரு பெரும் சமூகங்கள் தீர்மானிக்குமா அல்லது முக்கியத் தலைவர்களின் கட்சித் தாவல் மாற்றத்தை உருவாக்குமா என்பது குறித்து அலசுகிறார். ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட்.

Karnataka
Karnataka

ஹைதராபாத்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் வெளியான நிலையில், பட்டியலில் பெயர் இல்லாத அதிருப்தியில், கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியில் சேரவோ அல்லது சுயேட்சையாக போட்டியிடவோ பாஜக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது கடந்த ஆண்டு நடந்த ஹிமாச்சலப்பிரதேச தேர்தலையும், அதில் பாஜக தோல்வி அடைந்ததையும் நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஹிமாச்சலப்பிரதேச தேர்தலின் போது பாஜகவுக்கு ஏற்பட்ட அனுபவம், வரும் மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலில் மீண்டும் நிகழுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலான தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அந்த மாநிலங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கர்நாடகாவை கைப்பற்றுவது பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதனால் தான் கட்சி விலகலைத் தவிர்க்க வேட்பாளர் பட்டியலை அந்த கட்சி தாமதப்படுத்தியது. மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் கடைக் கோடி தொண்டர்களையும் ஈடுபட வைப்பதற்கான யுக்தியை பாஜக கையாண்டது.

இதன் மூலம் வேட்பாளர் கடைக் கோடி தொண்டரிடம் பெற்று உள்ள செல்வாக்கை உறுதிபடுத்த முடியும் என்றும் ஆர்வம் உள்ள தலைவர்களை உருவாக்க முடியும் என பாஜக நினைத்தது. அதன் காரணமாகவே 224 தொகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை கொண்டு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மூன்று சிறந்த வேட்பாளர்களை முன்மொழியுமாறு பாஜக தலைமை கேட்டுக்கொண்டது.

அப்படி கூறப்படும் 3 சிறந்த வேட்பாளர்களில் ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாஜக மேலிடத் தலைவர்கள் நான்கு நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் தலைமையில் இருந்து முடிவு எடுக்கப்படாமல் களத்தில் உள்ள கட்சித் தொண்டர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதை மாநிலத்தின் கடைக் கோடி தொண்டனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பாஜக இந்த யுக்தியை கையாண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், மாநிலத்தின் தலைமையை டெல்லியின் மேல் மட்டம் தீர்மானித்ததாக கூறப்பட்டது. அது மாநில தலைமையில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. அதை வெளிப்படையாக கூறும் வகையில் இமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரான வந்தனா குலேரியா கருத்துகளும் வெளிப்படுத்தியது

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து வந்தனா குலேரியா, டெல்லியில் இருந்து பட்டியல் வேண்டுமானால் வரலாம், ஆனால் அந்தந்த மாநிலத்தில் தான் வாக்குகள் செலுத்தப்பட வேண்டும் என்று கிண்டலாகக் கூறியது மாநில அரசில், கட்சியின் மேல் மட்டத்தின் தலையீடு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அப்பட்டமாக பிரதிபலித்தது.

கர்நாடகாவில் பாஜகவின் முதல் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், வேட்பாளர் தேர்வில் தங்களது பெயர்கள் இல்லாததை கண்டு சிலர் கோபமடைந்தனர். அதன் விளைவே எதிர்க் கட்சிகளை நோக்கி செல்வதும், சுயேட்சைகளாக போட்டியிட திட்டமிடுவது உள்ளிட்ட பணிகள் அரங்கேறின.

வாய்ப்பு கிடைக்காதவர்களை ஏளனப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மாநிலத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை ஆட்டம் காணும் ஆபத்தை ஏற்படுத்துக் கூடும். பாஜகவின் வேட்பாளர் பட்டியலால் 20 முதல் 30 பேர் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியில் பாஜகவுக்கு அவர்களே ஆபத்தாக கூட அமையக் கூடும் என கருதப்படுகிறது.

அந்த வகையில் லிங்காயத் சமூகத்தின் தலைவர்களான ஜெகதீஷ் ஷட்டர் மற்றும் லக்சமண் சவாதி உள்ளிட்டோர் பாஜகவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். மாநிலத்தில் 17 சதவீத வாக்குகளைப் கொண்டு சமூகத்தின் மீது அதிகப்படியான செல்வாக்கை இருவரும் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக உறுப்பினர் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நபராக ஜெகதீஷ் ஷெட்டர் விளங்கினார். ஷெட்டரின் தந்தை பாஜகவில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இதனால் லிங்காயத்து சமூக மக்களின் வாக்கு வங்கியை சரிக்கக் கூடும். ஹுப்பள்ளி தார்வாட்(சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு மறுக்கப்பட்டதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக கர்நாடகாவில் வேட்பாளர் தேர்வால் கட்சி விலகல் அதிகரித்து காணப்படுகிறது. அதுவே பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. உறுப்பினர்களின் கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் 2017 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் பிடித்த ஆட்சியை மீண்டும் பாஜகவால் தக்க வைக்க முடியவில்லை.

கர்நாடகாவிலும் தற்போது இதேபோன்ற சூழல் நிலவுகிறது. அங்கும் தற்போது நிகழும் தலைவர்கள் விலகல் வாக்குப் பிரிவினைக்கு வழி வகுக்கலாம் என கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க வேட்பாளர் தேர்வில் பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்ட போதும் அவை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த பாஜக உறுப்பினர்கள் கட்சித் தாவல் மற்றும் சுயேட்சையாக நிற்க முடிவுகளை மேற்கொண்டதால் மாநிலத்தில் பாஜகவின் இருப்புக்கு நெருக்கடிக்கு ஏற்பட்டு உள்ளதாகவும், அதுவே கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள இமாச்சல பிரதேசம் ஒரு பாடமாக இருந்தாலும், மீண்டும் அதே தவறுகளை பாஜக மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் போது சோலன் மாவட்டத்தில் உள்ள நலகர் தொகுதியில் வேட்பாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் வெற்றியும் பெற்றார். அது பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதேபோல் குலு மற்றும் ஹரோலி தொகுதிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.

சம்பா சட்டப்பேரவையில் நீலம் நய்யாருக்கு பதிலாக ஊழல் புகாரில் சிக்கிய இந்திரா கபூருக்கு வாய்ப்பு அளித்ததற்கான விலையை பாஜக கொடுத்தது என்றே கூறலாம். இந்திரா கபூர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றது தேர்தலில் பிரதிபலித்தது. சம்பா தொகுதியிலும் பாஜக பெரும் பின்னடவை சந்தித்து.

பிராண்ட் மார்கெட்டிங் என்ற கருத்தயலின் படி வேட்பாளரை விட கட்சிக்காக மக்கள் வாக்களிப்பு சதவீதம் அதிகரிக்கும் என்ற நிலையை பாஜக யோசனையாக கொண்டு இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஹிமாச்சல பிரதேசத்தில் தோல்வியை தழுவும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதேபோன்ற சூழல் கர்நாடகாவிலும் நிலவுவதாக கருதப்படுகிறது.

அதேநேரம் கர்நாடகாவுடன் ஒப்பிடும் போது ஹிமாச்சல பிரதேசத்தை கையாளுவது என்பது பாஜகவுக்கு மிகவும் எளிதானது. ஹிமாச்சல பிரதேசத்தில் வாக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் காரணிகள் நிலவுகின்றன. அனால் கர்நாடக தேர்தலில் அதுபோன்ற சூழல் இல்லை எனக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் முக்கிய சமூகங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா பிரிவுகளை திருப்திப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் அதேநேரம் பஞ்சாராஸ் போன்ற சமூகங்களை பாஜக புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் மத்திய கர்நாடகா பகுதி இந்த முறை பாஜகவுக்கு முக்கியமான பகுதிகளாக கருதப்படுகின்றன. ஏனென்றால் அந்த பகுதிகளில் பாஜகவுக்கு அதிகளவிலான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவில் தொடரும் கட்சி விலகலுக்கும், அதனால் ஏற்படும் தாக்கத்தை பிரசாரத்தின் மூலம் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் சட்டப்பேரவை தேர்தலை மேலும் சுவாரஸ்ய மிக்க ஒன்றாக மாற்றும் என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை எனபதே நிதர்சனம்.

இதையும் படிங்க : மேற்கு வங்க அரசினை கவிழ்க்க அமித் ஷா சதி - மம்தா பானர்ஜி விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.