ETV Bharat / lifestyle

மி 10 டி ப்ரோ வாங்கலாமா? - விவரங்கள் கீழே

author img

By

Published : Oct 31, 2020, 6:19 PM IST

சியோமி நிறுவனத்தின் மிகச்சிறந்த படக்கருவிகள் கொண்ட கைப்பேசியான மி 10டி ப்ரோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். 108 மெகாபிக்சல்களைக் கொண்ட முதன்மைப் படக்கருவி, 5ஜி இணைப்பு என இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன.

Features of Xiaomi Mi 10T Pro
Features of Xiaomi Mi 10T Pro

டெல்லி: சீனாவின் சியோமி நிறுவனம் மி 10டி ப்ரோ கைப்பேசியை இந்தியாவில் ரூ. 39,999க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது காஸ்மிக் பிளாக், சந்திர வெள்ளி, அரோரா நீலம் ஆகிய நிறங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது. இக்கைபேசி குறித்த கூடுதல் அம்சங்களை கீழே காணலாம்.

மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • டூயல் சிம் (நானோ)
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட எம்ஐயுஐ 12
  • 6.67 அங்குல அளவிலான புல் எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) தொடுதிரை உடன் 20: 9 என்கிற திரை விகிதம்
  • 144Hz உடன் விரைவான படங்களை துல்லியமாக காணும் தரம்
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
  • கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
  • 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம்
  • மூன்று பின்பக்க படக்கருவி அமைப்புள்ளது - அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்(ஓஐஎஸ்) கொண்ட 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பீ படக்கருவி உள்ளது.
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
  • 128ஜிகா பைட் வரை யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பு திறன்
  • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, இன்ஃபிராரெட், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் அம்சங்கள் உள்ளது.
  • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
  • இரட்டை ஸ்டீரியோ ஒலிப்பெருக்கிகள் உள்ளன.
  • 33வாட் விரைவு மின்னூக்கி ஆதரவுடன் 5,000mAh மின்கல சேமிப்புத் திறன்
  • கைபேசி அளவீட்டில் 165.1x76.4x9.33 மிமீ
  • 218 கிராம் எடை
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
    மி 10 டி ப்ரோ சிறப்பம்சங்கள்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.