ETV Bharat / lifestyle

காசாளர் இல்லாத மளிகைக்கடை: புதிய வரையறைகளுடன் களமிறங்கியது அமேசான்!

author img

By

Published : Feb 27, 2020, 10:44 PM IST

வாஷிங்டன்: காசாளர், சோதனைகள், பதிவேடு என எதுவுமில்லாமல் செயலி மூலம் மளிகைப் பொருள்களை வாங்கும் விதத்தில் புதிய கடையை திறந்துள்ளது அமேசான் நிறுவனம்.

காசாளர் இல்லாத அமேசானின் மளிகைக்கடை
காசாளர் இல்லாத அமேசானின் மளிகைக்கடை

இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கிய காலத்திலிருந்தே, இணையத்தில் பொருள்களை விற்கும் பிரபல நிறுவனம், அமேசான். இதனுடைய பக்கத்தில் மாட்டுச்சாணம் தொடங்கி வழக்கொழிந்துபோன ஒரு ரூபாய் நோட்டு வரையும் நம்மால் ஆர்டர் செய்ய முடியும். இந்நிலையில், மளிகைப் பொருள்களை நேரடியாக வாங்க அமேசான் புதிய யுக்தியைக் கையாண்டுள்ளது.

சாதாரணமாக, நாம் செல்லும் கடைகளில் நுழைவுவாயில் சோதனை, பணம் செலுத்துமிடத்தில் வரிசை உள்ளிட்ட பல வரைமுறைகள் இருக்கும். இந்த விதிமுறைகளையெல்லாம் பின்னுக்குத்தள்ளி காசாளர், தனி பதிவேடுயில்லாத மளிகைக்கடையை திறந்துள்ளது அமேசான் நிறுவனம்.

காசாளர் இல்லாத அமேசானின் மளிகைக்கடை
காசாளர் இல்லாத அமேசானின் மளிகைக்கடை

இந்தக் கடையில் நுழையும்போது, அலைபேசியிலிருக்கும் அமேசான் செயலியினை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் எடுக்கும் பொருள்களின் பட்டியல் உங்கள் கணக்கில் சேரத் தொடங்கும். ஒருவேளை நீங்கள் எடுத்த பொருளைத் திரும்ப வைத்தால் பட்டியலிருந்து அந்தப் பொருளின் பெயர் நீங்கிவிடும்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் தொடங்கப்பட்டுள்ள இக்கடை, ஏழாயிரத்து 700 சதுர அடிகளில் கட்டப்பட்டுள்ளது. இதே அளவில் அல்லது பெருநகர மாவட்டங்களுக்குத் தகுந்த அளவில் டிஜிட்டல் முறையிலான மளிகைக் கடையை வெவ்வேறு இடங்களில் தொடங்கும் திட்டம் அமேசானிடம் இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: 26 வயதில் ரூ. 7,800 கோடி சொத்து - இளம் வயதில் சிகரம் தொட்ட ’ஓயோ’ நிறுவனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.