ETV Bharat / jagte-raho

தனியுரிமை தகவல்களை திருடுவதாக ஜூம் செயலி மீது வழக்கு!

author img

By

Published : May 21, 2020, 3:34 PM IST

ஜூம் செயலியில் பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பதால், அதனை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் தனி நபர்களில் தகவல்களுக்கு பாதுகாப்பில்லை எனவும், எண்ட் டு எண்ட் பாதுகாப்பு அம்சம் இல்லை எனவும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

zoom app issue
zoom app issue

டெல்லி: ஜூம் செயலிக்கு தடைவிதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹர்ஷ் சக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், ஜூம் செயலியில் எந்தவித பாதுகாப்பு அம்சமும் இல்லை என்று கூறியவர், மேலும் எண்ட் டு எண்ட் பாதுகாபில்லாமல், பயனர்களுக்கு காணொலி அழைப்புச் சேவையை வழங்கிவருகிறது.

விலைகுறைந்த ஹெச்.டி டேப்லெட்டை வெளியிட்டது வால்மார்ட் நிறுவனம்!

இது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்பம் (தகவல் இடைமறிப்பு, கண்காணித்தல் மற்றும் மறைகுறியாக்கத்திற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்புகள்) விதிகள், 2009ஐ மீறுவதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, ஜூம் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தவேண்டாம் என மத்திய அரசாங்கமே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.