ETV Bharat / jagte-raho

போலி ஃபேஸ்புக் பக்கம்; டிஎஸ்பி-க்கே இந்த நிலைமையா!

author img

By

Published : Oct 11, 2020, 3:18 PM IST

வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி-யின் பேரில் போலியான ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அடையாளம் தெரியாத நபர்கள், அவரது நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளனர்.

போலி பேஸ்புக் பக்கம்
போலி பேஸ்புக் பக்கம்

வேலூர்: தனது பெயரிலேயே போலியான ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி பணம் கேட்பதால், யாரும் அதனை நம்பி பணம் தரவேண்டாம் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி, தனது நண்பர்களை எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்ட காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக உள்ளவர் எ.டி. ராமச்சந்திரன். இவர் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஃபேஸ்புக்கில் போலியாக கணக்கு ஒன்று தொடங்கி, அவரது நண்பர்கள் பட்டியலில் இருந்த சிலருக்கு ஃபேஸ்புக் மெசேஞ்சர் (Facebook Messenger) மூலம் பேசி பணம் கேட்டுள்ளார்.

இதனை அறிந்த டிஎஸ்பி ராமசந்திரன் தனது உண்மையான ஃபேஸ்புக் பக்கத்தில் "என்னுடைய பெயரில் அடையாளம் தெரியாத நபர் திருட்டுத்தனமாக ஒரு அக்கவுண்ட் தொடங்கி ஃபேஸ்புக் மெசேஞ்சரில்(Facebook Messenger) பணம் கேட்டு வருகிறார். யாரும் அவரை நம்பி ஜிபே(G Pay) மூலம் அவர் குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணுக்குப் பணம் அனுப்பிவிட வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து டிஎஸ்பி பேசியபோது, 'யார் இப்படி செய்தது என்பது தெரியவில்லை. எனது நண்பர்கள் சிலர் உங்கள் பெயரில் யாரோ ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கி பணம் கேட்பதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடன் எனது ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதிவு செய்துள்ளேன்.

அத்துடன் உடனடியாக போலி கணக்கை ரிப்போர்ட் செய்ததால் ஃபேஸ்புக்கில் இருந்து அக்கணக்கு நீக்கப்பட்டுவிட்டது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பரிதாப நிலையில் பவளத்தானூர் ஏரி; நஞ்சாக மாறும் நிலத்தடி நீர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.