ETV Bharat / international

WhatsApp Channels: விரைவில் வருகிறது வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் "வாட்ஸ்அப் சேனல்ஸ்"

author img

By

Published : Jun 9, 2023, 8:27 PM IST

whatsapp
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக "வாட்ஸ்அப் சேனல்ஸ்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையாக இருக்கும் என்றும், பயனர்கள் விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது "வாட்ஸ்அப் சேனல்ஸ்" என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேனல்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை அனுப்பும் வகையிலாக ஒரு வழி ஒளிபரப்பாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, பொழுதுபோக்கு, பிரபலங்களின் லேட்டஸ்ட் சமூக வலைதள அப்டேடுகள் உள்ளிட்டவை வாட்ஸ்அப் சேனல்ஸ் மூலமாக வழங்கப்படும். இதில் பயனர்கள் தாங்கல் விரும்பிய சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து, பின்தொடரலாம். அந்த சேனல்களில் அப்டேட்டுகள் வரும்போது, நோட்டிபிகேஷன் கொடுக்கப்படும், அதனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இதில் சேனல் வழங்குநராக இருப்பவர்களின் செல்போன் எண், புரொஃபைல் போட்டோ போன்ற தனிப்பட்ட விபரங்கள் பின் தொடரும் சப்ஸ்கிரைபர்களுக்கு காண்பிக்கப்படாது. அதேபோல், சேனலைப் பின்தொடர்பவர்களின் தனிப்பட்ட விபரங்கள் சேனலின் நிர்வாகிகளுக்கு காண்பிக்கப்படாது. இது தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையாகவே இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. யாரைப் பின்தொடருவது என்பது பயனர்களின் தனிப்பட்ட விருப்பம்.

அதேபோல் சேனல்களில் வரும் அப்டேட்டுகள் பயனர்களின் சாட்களில் 30 நாட்களுக்கு மட்டுமே சேமிக்கப்படும், அதன் பிறகு அனைத்து அப்டேட்களும் மறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சேனல்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை, அவை முற்றிலும் தனிப்பட்டவை அல்ல. இருப்பினும், எதிர்காலத்தில் சில சேனல்களை என்க்ரிப்ட் செய்வதற்கான வழிகளை பரிசீலித்து வருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் சேனல்ஸ் அம்சம், கொலம்பியா மற்றும் சிங்கப்பூரில் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த அம்சத்தை கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் 'வாய்ஸ் ஸ்டேட்டஸ்', 'பிரைவேட் ஆடியன்ஸ் செலக்டர்' உள்ளிட்ட புதிய ஸ்டேட்டஸ் அம்சங்களை கொண்டு வந்தது. அதேபோல், பல்வேறு ஸ்டேட்டஸ் அம்சங்களையும் கொண்டு வந்தது. அதன்படி, 'ஸ்டேட்டஸ் ரியாக்‌ஷன்ஸ்', 'ஸ்டேட்டஸ் புரொஃபைல் ரிங்', 'லிங்க் ப்ரீவியூ' உள்ளிட்டவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் இனி "வாய்ஸ் ஸ்டேட்டஸ்" வைக்கலாம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.