ETV Bharat / international

மீண்டும் அமலுக்கு வந்தது ட்விட்டர் "ப்ளூ டிக்"; ட்வீட்களின் எழுத்து வரம்பு அதிகரிப்பு

author img

By

Published : Dec 12, 2022, 5:15 PM IST

ட்விட்டரில் ப்ளூ டிக் அம்சம் இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ப்ளூ டிக் வசதியைப் பெற சாதாரண பயனர்களுக்கு 8 டாலரும், ஐஃபோன் பயனர்களுக்கு 11 டாலரும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Twitter
Twitter

சான் ஃபிரான்சிஸ்கோ(அமெரிக்கா): ட்விட்டரை கைப்பற்றியது முதல் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் வசதியை, அனைத்து பயனர்களுக்கும் கட்டணத்துடன் வழங்க முடிவு செய்தார்.

அதன்படி ட்விட்டரின் ப்ளூ டிக் வசதியைப் பெற மாதம் எட்டு டாலர் சந்தா செலுத்த வேண்டும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் ஏராளமானோர் போலி கணக்குகளுக்கும் சந்தா செலுத்தி ப்ளூ டிக் வசதியை வாங்கினர். இதனால் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. இதன் எதிரொலியாக பல்வேறு விளம்பர நிறுவனங்கள் ட்விட்டரை விட்டு விலகின. இதன் காரணமாக ப்ளூ டிக் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(டிச.12) முதல் ப்ளூ டிக் வசதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண பயனர்கள் ப்ளூ டிக் வசதியை வைத்துக் கொள்ள மாதம்தோறும் 8 டாலரும், ஐஃபோன் பயனர்கள் 11 டாலரும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூ டிக் பயனாளர்கள் 1080பி வீடியோக்களை பதிவிடவும், ட்வீட்களை எடிட் செய்யவும் முடியும்.

இதேபோல் ட்வீட்களின் எழுத்து வரம்பினை அதிகரிக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளது. ட்வீட்களின் எழுத்து வரம்பு 280ஆக உள்ள நிலையில், இதனை 4,000 ஆக உயர்த்தப்படவுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

'4,000 எழுத்துகள் என்பது ஒரு கட்டுரை- அது ட்வீட் அல்ல' என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை தவறானது என்றும், உண்மையான தகவல்களை விரைந்து தருவதற்காகவே ட்விட்டர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இந்த எழுத்து வரம்பை அதிகரித்தால் தகவல்களின் உண்மைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் பயனர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ப்ளூ டிக் மறுவெளியீடு மீண்டும் ரத்து - ஆள்மாறாட்டங்களை தடுக்க எலான் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.