ETV Bharat / international

இந்தியாவின் முக்கிய தலைவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித்திட்டம்

author img

By

Published : Aug 22, 2022, 7:46 PM IST

இந்தியாவில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரை மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Russia detains IS suicide bomber
Russia detains IS suicide bomber

மாஸ்கோ: இதுகுறித்து ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது தெரிய வந்தது. இவருக்கு துருக்கியைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் பயிற்சி கொடுத்து தயார் செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்து இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்த உள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த மாதம், திருப்பத்தூர் மாவட்டத்தில் அனாஸ் அலி என்னும் கல்லூரி மாணவர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக மத்திய உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென் அமெரிக்காவில் காந்தி சிலை திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.