ETV Bharat / international

US school shooting: பள்ளியில் துப்பாக்கிச் சூடு... மாணவன் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:27 AM IST

US school shooting one student dead: அமெரிக்காவில் பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் கொல்லப்பட்டார். என்ன காரணத்திற்காக மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shot
Shot

கிரின்ஸ்பர்க் : அமெரிக்காவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவன் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் கிரின்ஸ்பர்க் நகரில் உள்ள செயின்ட் ஹெலினா காலேஜ் அண்ட் கரியர் அகாடாமி என்ற உயர் நிலைப் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து உள்ளது.

துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு கொண்டு வந்த மாணவர் சக மாணவரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவன் துப்பாக்கியை பள்ளிக்கு மறைத்து வைத்து கொண்டு வர என்ன காரணம், யாரோ ஒரு மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான காரணம் என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு இடையே வழக்கம் போல் பள்ளி இயங்கும் என நிர்வாகம் அறிவித்து இருப்பது பெற்றோரிடையே அதிருப்தி மற்றும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. ஆங்காங்கே அவ்வப்போது துப்பாக்கிச் சூடுகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. துப்பாக்கி கலாசாரத்திற்கு முட்டுக்கட்டை போட அரசு தவறியதே இது போன்ற குற்றச் செயல்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி பயன்படுத்தலாம் எனக் கூறப்படுவதால் அங்கு எளிதில் துப்பாக்கி சூடு சம்பந்தமான வன்முறைகள் அரங்கேறுகின்றன. துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த மாகாண அரசுகள் கடும் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என அதிபர் பைடன் அறிவுறுத்தி வருகிறார்.

இருப்பினும் செனட் மற்றும் கீழமை சபைகளில் அதிபர் பைடனுக்கு போதிய ஆதரவு இல்லாததால் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை இயற்ற முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் ஆண்டுக்கு ஆயிராமாயிரம் உயிர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சிக்கி ரத்தம் சிந்துகின்றன.

இதையும் படிங்க : Ind Vs SL Asia Cup 2023 : இந்திய சுழலில் சுருண்ட இலங்கை! இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.