ETV Bharat / international

எலான் மஸ்க்  சொந்த வாக்கெடுப்பில் - இத்தனை பேருக்கு விருப்பமா?

author img

By

Published : Dec 20, 2022, 11:55 AM IST

Updated : Dec 20, 2022, 12:22 PM IST

ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகுவது தொடர்பான தனது சொந்த வாக்கெடுப்பில், மஸ்க்குக்கு எதிராக கருத்துக்கணிப்பு முடிவுகள் திரும்பியுள்ளது.

எலான் மஸ்க் வாக்கெடுப்பு - இத்தனை பேருக்கு விருப்பமா?
எலான் மஸ்க் வாக்கெடுப்பு - இத்தனை பேருக்கு விருப்பமா?

சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அதன் சிஇஓவாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே அதிகப்படியான ஊழியர் நீக்கம், ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கட்டண விதிமுறைகள் போன்றவைகளால், எலான் மஸ்க் உலகம் முழுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி ட்விட்டரில் தலைமை நிர்வாக அலுவலராக நான் தொடரலாமா என எலான் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். அதிலும் ட்விட்டரில் புளூ டிக் வைத்திருப்பவர்களால் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க முடியும் எனவும் அறிவித்தார்.

இந்த கருத்துக்கணிப்பு உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு முடிவுகள் மஸ்க்குக்கு எதிராக திரும்பியுள்ளன. ஏனென்றால் 57.5 சதவீதம் பேர், எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, பயனர்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Whatsapp Pay செயலியின் இந்திய தலைவர் ராஜினாமா!

Last Updated : Dec 20, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.