ETV Bharat / international

பிரதமரின் வீடு தீக்கிரை, அதிபர் ராஜினாமா- என்ன நடக்கிறது இலங்கையில்? டாப்-10 தகவல்கள்

author img

By

Published : Jul 10, 2022, 10:24 AM IST

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். தற்போது பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

பிரதமரின் வீடு தீக்கிரை, அதிபர் ராஜினாமா- என்ன நடக்கிறது இலங்கையில்? டாப்-10 தகவல்கள்
பிரதமரின் வீடு தீக்கிரை, அதிபர் ராஜினாமா- என்ன நடக்கிறது இலங்கையில்? டாப்-10 தகவல்கள்

கொழும்பு: இலங்கை பிரதமர் விக்ரமசிங் தங்கியிருக்கு வீட்டிற்கு போராட்டக்காரர்கள் நேற்று (ஜூலை 9) தீ வைத்துள்ளனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுபாடு ஏற்பட்டது.

பொதுமக்கள் இந்த நிலையை சமாளிக்க முடியாமல் திணறினர். மேலும் அங்கு பல போராட்டக்காரர்கள் கிளர்ச்சியெழுந்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்சவின் மாளிகைக்கு சில போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மீண்டும் போராட்டக்காரர்கள் கிளர்ந்தெழுந்து கொழும்பில் உள்ள பிரதமர் இல்லத்தை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பி ஓடினார். நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது, தற்போது இலங்கையின் நிலை என்ன? முக்கியமான டாப் 10 தகவல்கள்.

  1. போராட்டக்காரர்கள் நேற்று (ஜூலை 9)கொழும்பில் உள்ள பிரதமர் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு பேரணியாகச் சென்று அவரைச் சுற்றி வளைத்து, அவர் பதவி விலகுமாறு வலியுறுத்தினர். இலங்கை காவல்துறையின் உயரடுக்கு சிறப்பு அதிரடிப் படை (STF) போராட்டக்காரர்கள் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 6 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனையடுத்து விக்ரமசிங் அவரது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
  2. “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்துள்ளனர்” என பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண சபாநாயகரால் தலைமயில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். பின்னர் வேறு கட்சியின் ஆட்சி அமைந்ததும், அக்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததும் பதவி விலகப் போவதாக அறிவித்தார்.
  3. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த முடிவால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தடைகளை உடைத்து இலங்கையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் செய்தனர். பின்னர் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் அருகிலுள்ள அலுவலகத்திற்குள் நுழைந்தனர். நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பான ஒரு தலைவருக்கு எதிராக போராட்டம் மூலம் அவர்களது கோபத்தை வெளிபடுத்தினர்.
  4. பிரதமர் ரனில்விக்ரமசிங் கட்சித் தலைவர்களிடம் தான் பதவி விலக போவதாக கூறினார். மேலும் நாட்டில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இலங்கைக்கு வருகைதருவதால், கடன் நிலைத்தன்மை அறிக்கை என்பனவற்றை கருத்திற்கொண்டு தான் பதவி விலக தீர்மானித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.இது குறித்தான பரிந்துரையை IMF( island-wide fuel distribution) விரைவில் இறுதி செய்ய உள்ளது. குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.
  5. இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், அங்குள்ள தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்பு பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா மற்றும் பிற நாடுகள் உதவிய பின்னும் நாட்டில் பற்றாக்குறை நிலவுகிறது. பொருளாதார வீழ்ச்சியால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளை வாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
  6. மக்களின் கொந்தளிப்பால் பல மாதங்களாக போராட்டங்கள் நீடித்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு தசாப்தாங்களாக இலங்கையை ஆண்ட ராஜபக்சே அரசியல் வம்சத்தை கிட்டத்தட்ட சிதைத்துவிட்டது.
  7. இலங்கை அதிபரின் மூத்த சகோதரரான மகிந்த ராஜபக்ச சென்ற மே மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், போராட்டக்காரர்களின் வன்முறையால் அவர் கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளார், அதே நேரத்தில் மற்ற மூன்று ராஜபக்ச உறவினர்கள் தங்கள் அமைச்சரவை பதவிகளை ராஜினாமா செய்தனர். மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் இலங்கையை குழப்பத்திற்கு இழுத்துச் செல்வதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களில் பெரும்பாலானோர் ராஜபக்ச குடும்பத்தின் மீது கோபமடைந்துள்ளனர்.
  8. இதனையடுத்து மே மாதத்தில் பதவியேற்ற புதிய பிரதமர் விக்ரமசிங் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் அவரை பதவியிலிருந்து விலக கோரி பல எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
  9. அதிபரின் இல்லத்திற்கு வெளியே கடந்த மூன்று மாதங்களாக போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூலை9) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசியக் கொடிகளை ஏந்திக்கொண்டு தடைகளை உடைத்து அதிபரின் இல்லத்தை ஆக்கிரமித்தனர். அருகிலுள்ள மற்றொரு கட்டிடத்தில் உள்ள அவரது கடலோர அலுவலகத்தையும் தாக்கினர்.
  10. சமூக ஊடகங்களில் போராட்டங்கள் தொடர்பான காணொளிகள் வெளியானது. அதில் மக்கள் "கோட்டா வீட்டுக்குப் போ" என்று கோஷமிட்டனர். அதிபரை அவரது புனைப்பெயரில் அழைத்தனர். பல போராட்டக்காரர்கள் அதிபர் இல்லத்தில் இருந்த குளத்தில் குதிப்பது, வீட்டின் உள்ளே நுழைந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காணொளிகள் வைரலானது. கட்டிடத்திற்கு வெளியே இருந்த தடுப்புகளை கவிழ்த்து, கம்பத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இதையும் படிங்க:இலங்கை பிரதமர் ரணில் ராஜினாமா செய்ய முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.