ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி!

author img

By

Published : Sep 28, 2022, 11:03 AM IST

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

indian-
indian-

நியூயார்க்: ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எங்கள் அணுகுமுறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2,593இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி சர்வதேச சமூகத்தின் நலனை நோக்கியே இருக்கிறது.

அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவது, பெண்கள்- குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட அனைத்தையும் இந்தியா பின்பற்றி வருகிறது.

ரஷ்யா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் போர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. கடந்த சில மாதங்களில், 40,000 மெட்ரிக் டன் கோதுமை, 36 டன் அத்தியாவசிய பொருட்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா கவலையில் உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உதவிகள் எந்தவித பாரபட்சமும் இன்றி நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான பிரச்சனைகளில் சர்வதேச சமூகத்துடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அதேநேரம் கடந்த ஜூன் மாதம் காபூலில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது. இதுபோல சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதும், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் கவலை அளிக்கிறது. அண்மையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதையும் இந்தியா கண்டிக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஷின்சோ அபேவின் மறைவு இந்தியாவுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு - பிரதமர் மோடி உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.