ETV Bharat / international

சூரிய சக்தியின் ராணி மரியா டெல்க்ஸிற்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

author img

By

Published : Dec 12, 2022, 12:28 PM IST

உலகம் முழுவதும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் சூரிய மின் ஆற்றலுக்கு முன்னோடியாக திகழ்வது மரியா டெல்க்ஸ் கண்டுபிடித்த சூரிய ஆற்றல் செயல்பாடுதான் ஆகும்.

Etv Bharatசூரிய சக்தியின் ராணி மரியா டெல்க்ஸிற்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
Etv Bharatசூரிய சக்தியின் ராணி மரியா டெல்க்ஸிற்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

சூரிய ஆற்றல் துறையில் முன்னோடிகளில் ஒருவரான ஹங்கேரிய-அமெரிக்க உயிர் இயற்பியலாளர் டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் இன்று (டிச.12)சிறப்பு டூடுள் வெளியிட்டு கூகுள் சிறப்பித்துள்ளது. சூரிய ஆற்றலில் சிறந்து விளங்கிய மரியா "தி சன் குயின்" என்பதை நினைவு கூற கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற டெல்க்ஸ் 1952 ஆம் ஆண்டு இதே நாளில்(டிச.12) சொசைட்டி ஆஃப் வுமன் இன்ஜினியர்ஸ் அமைப்பின் சாதனை விருதை முதல் முறையாக பெற்றார்.

சூரியனின் சக்தி மனித வாழ்க்கையை மாற்றும் என்று நம்பியவர்களில் டெல்க்ஸும் ஒருவர் ஆவார். 1900 ஆம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்டில் டெல்க்ஸ் பிறந்தார். ஈட்வோஸ் லோராண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் 1920 இல் பட்டம் பெற்றார். 1924 இல் அதே பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் வாங்கினார். பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே அமெரிக்காவிற்குச் உயிரியல் இயற்பியலாளராக பணியாற்றினார். இதனையடுத்து 1937 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

பின்னர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்த சூரிய ஆற்றல் குழுவின் உறுப்பினராக சேர்ந்தார். அக்குழுவினருடன் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது கடல்நீரை குடிநீராக மாற்றும் சூரியசக்தியால் செயல்படக்கூடிய கருவியை வடிமைக்க டெல்க்ஸ் அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்டார். இவரின் அரிய கண்டுபிடிப்பு பசுபிக் கடலின் கரையோரங்களில் இருந்த போர் வீரர்களால் பயன்படுத்தப்பட்டது.

போர் முடிந்ததையடுத்து எம்ஐடி (மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்) சென்று அங்கு இணை ஆராய்ச்சி பேராசிரியாக சிறிது காலம் பணியாற்றினார். இங்கு தான் சூரிய ஒளியால் சூடேற்றப்பட்ட வீடுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். டெல்க்ஸ் வடிவமைத்த மாதிரி தோல்வியடைந்தது.

மாதிரி தோல்வியடைந்த காரணத்தால் ஆராய்ச்சி குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் 1948 ஆம் ஆண்டு தனியார் அமைப்பு ஒன்று வழங்கிய நிதி மூலம் கட்டடக் கலைஞர் எலினோர் ரேமண்டுடன் இணைந்து டோவர் சன் ஹவுஸை உருவாக்கினார். சூரிய வெப்ப மூட்டும் வீடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சூரியசக்தி சக்தி மூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கினார்.

இந்த அடுப்பு தற்போதும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் டெலாவேர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சூரிய ஆற்றலை ஆராய்ச்சி செய்ய உதவி செய்தார். டாக்டர் டெல்க்ஸ் 20க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மீது காப்புரிமைகளைப் பெற்றிருந்தார்.இவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் கூகுள் இன்று (டிச.12) மஞ்சள் மற்றும் காவி நிறத்திலான பின்புலம் கொண்ட சிறந்த டூடுலை வெளியிட்டு “தி சன் குயின்” என பெருமைப் படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:புவியியலாளர் மேரி தார்ப்பின் சாதனைகளுக்காக டூடுல் வெளியிட்ட கூகுள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.