ETV Bharat / international

அமேசானில் ஆட்குறைப்பா? : 10,000 ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்...!

author img

By

Published : Nov 15, 2022, 9:36 AM IST

Updated : Nov 15, 2022, 9:52 AM IST

ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசானும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான்
அமேசான்

வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக முக்கிய தகவல் தொழிலநுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. இந்த வரிசையில் வாஷிங்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானும் இணைய உள்ளது.

ஏறத்தாழ 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் இந்த அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. கார்பரேட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணியாளர்களின் எண்ணிக்கை மாறுபடலாம் என்றும், ஓட்டுமொத்தமாக 3 சதவீதம் ஊழியர்கள் ஆட்குறைப்பில் பாதிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அலக்சா கேட்ஜெட், வீட்டு பாதுகாப்பு கேமிரா, மனித வளம் மற்றும் சில்லரை விற்பனை உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் முதற்கட்டமாக பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வர உள்ள விடுமுறை கால ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட உள்ள பொருளாதார மந்தம் உள்ளிட்ட கணிப்புகளை கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு முடிவில் அமேசான் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாலி நகரில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது

Last Updated : Nov 15, 2022, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.