ETV Bharat / international

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இந்தியாவுக்கு பாதிப்பில்லை!

author img

By

Published : Dec 14, 2021, 9:42 AM IST

Updated : Dec 15, 2021, 9:13 AM IST

இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் இன்று (டிசம்பர் 14) ஏற்பட்டுள்ளது.

7.6 earthquake hits indonesia, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
7.6 earthquake hits indonesia

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மௌமர் நகரில் இருந்து வடக்கு திசையில் 90 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கடல்பகுதியில் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவு வரை நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்திய பெருங்கடல், வங்கக்கடல் பகுதிகளில் சுனாமி உண்டானது.

  • Earthquake of magnitude 7.6 on the Richter scale struck 95 km north of Maumere, Indonesia today: United States Geological Survey (USGS)

    — ANI (@ANI) December 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, சென்னை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் சுனாமியால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒமைக்ரான் காரணமாக பிரிட்டனில் முதல் மரணம்

Last Updated : Dec 15, 2021, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.