ETV Bharat / international

முஷாரஃப் மீதான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கக்கோரி மனு...!

author img

By

Published : Nov 26, 2019, 12:49 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப் மீதுள்ள தேச துரோக வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்கும்படி, அந்நாட்டு அமைச்சர் குரேஷி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெர்வேஸ் முஷாரஃப்
பெர்வேஸ் முஷாரஃப்

பாகிஸ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப் மீதுள்ள தேச துரோக வழக்கு நவம்பர் 28ஆம் தேதி விசாரணைக்கு வரயிருந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைக்கும்படி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை கடந்த திங்கள்கிழமை லாகூர் உயர் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டதால், அந்த நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் குடியரசுத் தலைவராக பர்வேஸ் முஷாரஃப் இருந்தபோது, அவசர நிலை பிரகடன் செய்ததற்காக 2013ஆம் ஆண்டு அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது.

மேலும் படிக்க: அமெரிக்க கடற்படை செயலர் பதவி நீக்கம்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.