ETV Bharat / international

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

author img

By

Published : Jan 23, 2020, 9:05 PM IST

இஸ்லாமாபாத் : கஜினாவி என்னும் குறுகிய தூர ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக சோதனையிட்டது.

Ghaznavi missile test, கஜினாவி ஏவுகணை பாகிஸ்தான் சோதனை
Ghaznavi missile test

அணு ஆயுதங்களைத் தாங்கி செல்லும் வல்லமை படைத்த கஜினாவி என்ற ஏவுகணையை பாகிஸ்தான் பாதுகாப்புப் படை இன்று சோதனையிட்டது.

"பல்வகை ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்த கஜினாவி ஏவுகணை சுமார் 290 கி.மி. தொலையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடியது" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படை செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் துணைத் தளபதி நதீம் ஜாகிர் மான்ஜ், ராணுவ வியூக திட்டப் பிரிவின் இயக்குநர், தேசிய பொறியியல் மற்றும் அறிவியில் ஆணைய (NESCOM) தலைவர், வியூக திட்டப் பிரிவின் மூத்த அலுவலர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் என பலர் இந்தச் சோதனையை பார்வையிட்டனர்.

சீனாவிடமிருந்து எம்-11 ஏவுகணையை பாகிஸ்தான் வாங்கமுடியாமல் போனதால், 1990-களில் இருந்து கஜினாவி ரக ஏவுகணைகளை பாகிஸ்தான் உருவாக்கத் தொடங்கியது. 2004ஆம் ஆண்டு காஸ்நாவி ஏவுகணை பாகிஸ்தான் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சோதனையிடப்பட்ட கஜினநாவி ஏவுகணை அப்கிரேடட் வெர்ஷன்.

இந்தியாவின் மீது படையெடுத்த இஸ்லாமிய அரசர் முகமது கஜினியின் பெயரே இந்த ஏவுகணைக்கும் வைக்கப்பட்டுள்ளது. ஹாஃப்த்- 3 காஸ்நாவி என்ற பெயரிலும் இந்த ஏவுகணை வழங்கப்பட்டு வருகிறது. அரபி மொழியில் ஹாஃப்த் என்றால் பயங்கரம், பழிவாங்கல் எனப் பொருள் படும்.

இதையும் படிங்க : சீனாவுக்கு பால் இந்தியாவுக்கு சுண்ணாம்பு - பாகிஸ்தானின் இரட்டை வேடம்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.