ETV Bharat / international

சீனாவின் பரப்புரை கருவியாகும் உலக சுகாதார அமைப்பு?

author img

By

Published : Apr 22, 2020, 1:44 PM IST

வாஷிங்கடன்: உலக சுகாதார அமைப்பு தனது உண்மைத் தன்மையை இழந்துவிட்டதாகவும் இப்போது சீனாவின் பரப்புரை கருவியாக அது மாறிவிட்டதாகவும் அமெரிக்கா கடுமையாகத் தாக்கியுள்ளது.

Robert O'Brien
Robert O'Brien

சீனாவில் கடந்தாண்டு கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று குறித்த தகவல்களை அந்நாடு முறையாக உலகிற்குத் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் சீனா சிறப்பாகச் செயல்பட்டதாகவும் இல்லையென்றால் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு பாராட்டியிருந்தது.

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தப்போவதாகத் தெரிவித்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், "இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பு தனது உண்மைத்தன்மையை இழந்துவிட்டது.

உலக சுகாதார அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. ஆண்டிற்கு 500 கோடி டாலர்களை அமெரிக்கா இந்த அமைப்பிற்குச் செலவிடுகிறது. அமெரிக்கா செலவழிப்பதில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே(40 மில்லியன் டாலர்) சீனா இந்த அமைப்பிற்கு வழங்குகிறது. இருப்பினும் இந்த அமைப்பு சீனாவின் ஒரு பரப்புரை கருவியாகவே செயல்படுகிறது.

கடந்த 14ஆம் தேதி இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவாது என்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை அந்நாடு சிறப்பாகக் கையாள்வதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் முற்றிலும் தவறான தகவல்கள்.

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகள் தடை விதித்தன. கடந்த பிப்ரவி மாதம் இதற்கும் உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது. உலக சுகாதா அமைப்பின் மிகத் தவறான வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்று.

சீனாவின் கம்யூனிச அரசு வைரஸ் பரவலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருந்தால் எப்படி வைரஸ் தொற்று 184க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியிருக்கும். உலக சுகாதார அமைப்பு தனது நம்பகத்தன்மையை இழந்துவருகிறது.

எனவே உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பை மாற்ற முடியுமா என்பது குறித்தும் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றிவருகிறது.

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட நட்பு நாடுகளும் மற்ற நாடுகளிலுள்ள தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோருக்கு அமெரிக்கா நேரடியாக நிதியளித்துவருகிறது" என்றார்.


இதையும் படிங்க: எல்லைகள் வழியே சீனாவுக்குச் செல்லும் கரோனா - தடுக்க களமிறங்கிய அரசு
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.