ETV Bharat / international

'ஹாங்காங் சென்றால் கைதுசெய்யப்படலாம்' - எச்சரிக்கும் அமெரிக்கா

author img

By

Published : Sep 15, 2020, 5:44 PM IST

பெய்ஜிங்: ஹாங்காங் செல்லும் அமெரிக்கர்கள் முறையான காரணங்களின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா தன் குடிமகன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

US issues new travel warning
US issues new travel warning

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு அதிகரித்துவருகிறது. அதிலும், குறிப்பாகக் கடைசி இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வரிகளை விதித்து, இரு நாடுகளும் மறைமுகமாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், ஹாங்காங் பகுதிக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அமெரிக்கா விடுத்துள்ளது. அதில், "ஹாங்காங் அல்லது சீனாவில் தங்கியிருக்கும் அல்லது அங்கு செல்லும் அமெரிக்கர்கள், அமெரிக்க தூதரக சேவைகளுக்கான அணுகல் இல்லாமல் தடுத்துவைக்கப்படலாம்.

அல்லது அமெரிக்க குடிமக்கள் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் மற்றும் சட்டப்படி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் நீண்ட நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்படலாம்.

மேலும், ஹாங்காங் பகுதியில் சீனா ஒருதலைப்பட்சமாகவும் தன்னிச்சையாகவும் தனது காவல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. சமீபத்தில் சீனா இயற்றியுள்ள சட்டம் ஹாங்காங் பகுதியை சேராதவர்களையும் உள்ளடக்கியது. எனவே, சீனாவைப் பகிரங்கமாக விமர்சிக்கும் அமெரிக்கர்களும் இதனால் பாதிக்கப்படாலம்" என்று அதில் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் காலனி நாடாக இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு முதல் சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சிப் பெற்ற பகுதியாக இருந்துவருகிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மற்ற அனைத்துத் துறைகளையும் மக்களால் ஹாங்காங் அரசே நிர்வகித்துவருகிறது. இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா தொடர்ந்து பல்வேறுச் சட்டங்களை இயற்றுகிறது. அதன்படி சமீபத்தில் ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை சீன அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

இது ஹாங்காங்கின் தன்னாட்சியை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா தலையீடு - அடித்துக்கூறும் மைக்ரோசாஃப்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.