ETV Bharat / entertainment

'Qantityயை விட Quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி

author img

By

Published : Sep 10, 2022, 6:03 PM IST

"படங்களில் நடிப்பதில் Quantity முக்கியம் இல்லை quality தான் முக்கியம்" என தனது 42ஆவது பிறந்தநாள் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

’quantityயை விட quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி
’quantityயை விட quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி

சென்னை: சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஜெயம் ரவி தனது 42 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவியுடன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “முதல் முறையாக பிறந்தநாள் விழா செய்தியாளர்களுடன் ஒரு சந்திப்பு நிறைவாக உள்ளது. உருப்படியான பிறந்தநாள் விழாவாக இதைப் பார்க்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் இதை ஏன் நடத்தவில்லை என்று தோன்றுகிறது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, ஆனால் 25 படம் தான் செய்துள்ளேன். எனக்கு பிறகு சினிமாவிற்கு வந்தவர்கள் 40,45 படங்கள் செய்துள்ளனர். ஏன் அந்த எண்ணிக்கை குறைவு என நினைத்து பார்த்தேன்.

அப்போது தோன்றியது, எப்பொழுதும் quality ஆக படம் பண்ண வேண்டும் என்பதால் தான் இவ்வளவு குறைவான படங்கள் செய்துள்ளேன் என நினைக்கிறேன். படங்கள் செய்வதில் Quantity முக்கியம் இல்லை quality தான் முக்கியம். என்னுடைய வெற்றிக்கு நல்ல படங்கள் தேர்ந்தெடுத்து நடித்தது தான் காரணம் அதனால் தான் தோல்வி படங்கள் குறைவு.

’ஜெயம்’ படம் முடிந்து 8 மாதம் வீட்டில் சும்மா இருந்தேன் அப்போது அப்பா என்னிடம் சொன்னது நல்ல படங்கள் வரும் வரை காத்திருப்பது தவறில்லை காத்திரு வெற்றி கிடைத்ததும் உடனே அடுத்து நடிக்க வேண்டும் என நினைக்காதே என்றார். ரசிகர்கள் ஒருபுறம் பலம் என்றால் மறுபுறம் பத்திரிகையாளர்கள் தான். தலைக்கணம் ஏறாமல் இருக்க உங்களுடைய எழுத்து மிகவும் உதவியது.

இதே வேளையில் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அப்பா அம்மாவிற்கும். சைக்கிள், எழுத்து, படிப்பு, நடிப்பு என என் அப்பா போல என் அண்ணா இருந்து உள்ளார். எப்போதும் என் குரு என் அண்ணா தான், அதேபோல என் அக்கா. இவர்களுக்கு இவ்வேலையில் நன்றி கூறுகிறேன்.

நான் வளர வேண்டும், நன்றாக வர வேண்டும் என்பதில் என் பிள்ளைகள் எண்ணமாக இருப்பார்கள். என்னை எப்போதும் ஹீரோவாக பார்க்கும் பிள்ளைகள். கடைசியாக என் மனைவி எனக்கு எல்லாமே என் மனைவிதான் அவருக்கு நன்றி” என்றார். ஜெயம் ரவிக்காக அம்மா அனுப்பிய கோவில் பிரசாத மாலையை மேடையில் அவரது மனைவி அவருக்கு அணிவித்தார் அதனை தொடர்ந்து மாலையை திருப்பி மனைவிக்கு அணிவித்தார்.

இதையும் படிங்க: பிரம்மாஸ்திரா முதல் நாள் கலெக்‌ஷன்ஸ் எவ்வளவு தெரியுமா...? ஆர்ஆர்ஆர் வசூலை தாண்டியதா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.