ETV Bharat / entertainment

மூன்றாவது நாளில் முன்னேற்றம் அடைந்த லியோ வசூல் - உலகம் முழுவதும் ரூ.200 கோடியைக் கடந்தது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 11:38 AM IST

Leo Box office collection: லியோ படத்தின் மூன்றாம் நாள் வசூல் மீண்டும் வேகம் எடுத்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம், லியோ. ஆங்கிலத்தில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவலாக உருவாகியுள்ள இப்படம், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸிலும் இணைந்துள்ளது.

இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பல்வேறு பிரச்னைகளைக் கடந்து வெளியான இப்படம் முதல் நாள் நல்ல வசூல் பெற்றது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. இது உலக அளவில் இந்திய படம் பெற்ற அதிகபட்ச வசூல் என்று கூறப்பட்டுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த ஜவான் படத்தின் வசூலையும் லியோ முறியடித்துள்ளது.

இந்தியா தாண்டி வெளிநாடுகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டதுதான் இதன் இமால‌ய வசூலுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், இரண்டாவது நாளில் இதன் வசூல் சற்று குறைந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று, இதன் வசூல் சற்று அதிகரித்து காணப்பட்டது. விடுமுறை நாள்‌ என்பதால், படத்தின்‌ வசூல் சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் ரூ.40 கோடியும், ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.5 கோடி, கேரளாவில் ரூ.7 கோடியும் கர்நாடகாவில் ரூ.5.5 கோடியும் வசூலித்துள்ளது. மூன்று நாட்களையும் சேர்த்து உலகம் முழுவதும் ரூ.200 கோடியைக் கடந்துள்ளது.

இதன்‌ மூலம் இரண்டே நாளில் லியோ திரைப்படம் ரூ.200 கோடியைக் கடந்துள்ளது. இந்தியா முழுவதும் 3 நாட்களில் ரூ.140 கோடியை கடந்துள்ளது. மேலும், இந்த வார விடுமுறை நாட்களில் அதன் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க நான் ஒன்றும் அண்ணாமலை இல்லை” - மன்சூர் அலிகான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.