ETV Bharat / entertainment

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… மாவீரன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

author img

By

Published : Feb 4, 2023, 2:19 PM IST

சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை மாவீரன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… மாவீரன் படக்குழு வெளியிட்ட வீடியோ
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… மாவீரன் படக்குழு வெளியிட்ட வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டு விளங்குபவர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை என்று தகவல் பரவியது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… மாவீரன் படக்குழு வெளியிட்ட வீடியோ

இதனிடையே சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை மாவீரன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அனைத்து வதந்திகளுக்கும் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி நடத்திய முதல் "சுயமரியாதை திருமணம்"!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.