ETV Bharat / entertainment

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் வெற்றிமாறன், மணிரத்னம் படங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 8:07 PM IST

Goa International Film Festival 2023: கோவாவில் நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI)இல் காட்சிப்படுத்தப்பட 'விடுதலை பாகம் 1', ’பொன்னியின் செல்வன் பாகம் 2' ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

கோவா சர்வதேச திரைப்பட விழா
கோவா சர்வதேச திரைப்பட விழா

சென்னை: மத்திய அரசு சார்பில் 54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஒவ்வொரு வருடமும் International competition for feature films, non competition (world panorama), country focus and curated packages, indian panorama, technical workshops masterclasses and academic sessions, film bazaar, content selection criteria ஆகிய 7 பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படும்.

இந்த திரைப்பட விழாவில் திரைப்படங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட விழாவில் திரையிட ஒரு சில தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வெளியான 'விடுதலை பாகம் 1' திரைப்படம், மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன் பாகம் 2', சம்யுக்தா விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான காதல் என்பது பொதுவுடைமை ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது. மேலும் கன்னடத்தில் கடந்த வருடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற காந்தாரா, மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்த ‘இரட்டா’, மம்மூட்டி, ஜோதிகா நடித்து இன்னும் வெளியாகாத காதல் ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன

Non feauture films பிரிவில், பிரவீன் செல்வம் இயக்கிய ‘நன்செய் நிலம்’ படம் தேர்வாகியுள்ளது. மேலும் இந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள மைக்கேல் டக்ளஸ், 1987ஆம் ஆண்டில் வெளியான ‘வால் ஸ்ட்ரீட்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையைக் கிளப்பும் லியோ... இனியும் தொடருமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.