ETV Bharat / entertainment

'டான்' படத்திற்கு 'யூ' சான்றிதழ்

author img

By

Published : May 9, 2022, 3:27 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் 'டான்' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

டான் படத்திற்கு யூ சான்றிதழ்
டான் படத்திற்கு யூ சான்றிதழ்

சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் 'டான்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டான்'.

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தினை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

அனிருத் இசை அமைத்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக் குழு ’யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: ராஷ்மிகாவை தொடர்ந்து “தளபதி 66” படத்தில் இணைந்த பிரபலங்கள் யார் யார்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.