ETV Bharat / entertainment

கோலிவுட்டில் இந்த வாரம் வரிசைகட்டும் திரைப்படங்கள்… என்னென்ன தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 6:22 PM IST

இந்த வாரம் தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த தொகுப்பை காணலாம்

கோலிவுட்டில் இந்த வாரம் வரிசைகட்டும் திரைப்படங்கள்
கோலிவுட்டில் இந்த வாரம் வரிசைகட்டும் திரைப்படங்கள்

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த வாரம் ஜோ, 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் பல்வேறு வகையான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதில் துருவ நட்சத்திரம், animal, அன்னபூரணி, பார்க்கிங் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்த துருவ நட்சத்திரம் கடந்த 24ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட சிக்கலால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போய் வரும் 30ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’பார்க்கிங்’ படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. கலகலப்பான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஹரீஷ் கல்யாணை, இந்த படத்தின் மூலம் வேறொரு ஜானரில் ரசிகர்கள் காண முடியும் என படக்குழு தெரிவித்து உள்ளது.

அடுத்ததாக, நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் சமையல் கலைஞர்களாக நடித்துள்ள ‘அன்னபூரணி’ டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. அறம், O2 உள்ளிட்ட படங்களில் நடத்து வந்த நயன்தாரா முற்றிலும் வேறு ஜானரில் நடித்து உள்ள படம் தான் அன்னபூரணி. ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

  • 📣 Drumroll, please! 🥁 Get ready for the most awaited trailer release of the year! Brace yourself for an absolute blockbuster, Annapoorani! 🌟

    In just 1 hour, at 6.30pm India time, the YouTube premiere of #Annapoorani 's trailer will leave you mesmerized! 🎬✨ pic.twitter.com/eB83PrQFjk

    — Karan Ayngaran (@karan_ayngaran) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடைசியாக, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள animal திரைப்படமும் வரும் 1ஆம் தேதி வெளியாகிறது. தென் இந்திய கிரஷ் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள படம் அனிமல். தந்தை - மகன் பாசப்பினைப்பை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் அனிமல்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கான புரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் முதல் முறையாக ஹீரோவாக நடித்து வெளிவர உள்ள வா வரலாம் வா, சூரகன் ஆகிய படங்களும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி திரை விருந்தாக வெளியாகிறது.

இதையும் படிங்க: சமூகவலைதளத்தை தெறிக்கவிடும் ஐஸ்வர்யா ராஜேஷின் ரீசன்ட் எலெகன்ஸ் லுக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.