ETV Bharat / entertainment

"விவாகரத்து என்னை மிகவும் பாதித்தது".. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்த சமந்தா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 3:58 PM IST

Updated : Nov 9, 2023, 5:00 PM IST

Samantha about divorce: நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்து என் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என தனியார் பத்திரிகை நிகழ்ச்சியின் நேர்காணலில் நடிகை சமந்தா கூறியுள்ளார்.

Samantha Ruth Prabhu reveals failed marriage with Naga Chaitanya impacted her career
திருமணம் குறித்து மனம் திறந்த சமந்தா

ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர், சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த சமந்தா, வெகுநாட்களுக்குப் பின் தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

தனியார் பத்திரிகை நிகழ்ச்சி நேர்காணலில், நீங்கள் உங்கள் வாழ்வில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள், அதற்கான காரணம் என்ன என்று சமந்தாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, “கடந்த இரண்டு வருடங்களாக நோய் பாதிப்பு, திருமண விவாகரத்து மற்றும் வேலை பாதிக்கப்பட்டு, எப்போதும் இல்லாத அளவிற்கு என் வாழ்வில் சரிவை சந்தித்துள்ளேன். ஆனால், என்னை விட அதிக மடங்கு சிலர் சரிவை சந்தித்து வருகின்றனர்.

அந்த நேரத்தில், என்னை விட சில நடிகை, நடிகர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். அவர்களின் கதைகளை கேட்கும்போது எனக்கு அது பலத்தை தந்து உதவியாக இருந்தது. இங்கு ஒரு நடிகருக்கு, மக்கள் அவர்களது அன்பை கொடுக்கிறார்கள் எனறால், அது விலை மதிக்கத்தக்க பரிசு.

எதிர்பாராத அந்த அன்பை பெறுவதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்வில் நடப்பதை சொல்ல வேண்டும். ஒருவர் எத்தனை சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார், எத்தனை விருதுகளைப் பெற்றுள்ளார், உடல் எப்படி உள்ளது என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு வலி, கஷ்டங்களை தாங்கி மேலே வந்துள்ளனர் என்பதுதான் முக்கியம்.

நான் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மக்களுக்கு தெரிவதை பொருட்படுத்தி கொள்ளவில்லை. உண்மையில் நான் அவர்களால்தான் மீண்டு வந்துள்ளேன். என்னிடம் உள்ள எல்லாவற்றுடனும் நான் போராடப் போகிறேன் என்று எனக்குத் தெரியும், மேலும் இது போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களும் தொடர்ந்து போராடுவதற்கான வலிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் நான்கு வருட திருமணத்திற்குப் பிறகு, அக்டோபர் 2021-இல் அவர்கள் பிரிந்து விவாகரத்து பெறுவதாக, தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். பின்னர், மயோசிடிஸ் நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட சமந்தா, வெளிநாட்டில் அதற்கான சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: போலி வீடியோ சர்ச்சைக்குப் பிறகு பொது வெளியில் தோன்றிய ராஷ்மிகா மந்தனா..!

Last Updated : Nov 9, 2023, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.