ETV Bharat / entertainment

மவுசு குறையாத ரஜினியின் படத் தலைப்புகள்

author img

By

Published : Jul 16, 2022, 6:03 PM IST

சிவகார்த்திகேயனின் படத்திற்கு 'மாவீரன்' எனப் பெயரிடப்படுள்ளது. இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் படத்தலைப்பை தனது படத்திற்கு பயன்படுத்தியுள்ளார், சிவகார்த்திகேயன்.

மவுசு குறையாத ரஜினியின் படத் தலைப்புகள்
மவுசு குறையாத ரஜினியின் படத் தலைப்புகள்

தமிழ் சினிமாவில் தற்போது எடுக்கப்படும் படங்களுக்கு அதிகமாக ஆங்கிலத்தில் தலைப்புகள் வைக்கப்படுகின்றன. இல்லை என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களின் தலைப்பு வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்பு வைக்கப்படும் போக்கும் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

ரஜினி படத்தலைப்புகளான “வீரா, தர்மதுரை, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், மனிதன், வேலைக்காரன், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல, தங்கமகன், ரங்கா, போக்கிரி ராஜா, நெற்றிக்கண், கழுகு, பொல்லாதவன், காளி, நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா,” ஆகியவை வெவ்வேறு நடிகர்களின் படங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

“கர்ஜனை, விடுதலை, துடிக்கும் கரங்கள், ஆயிரம் ஜென்மங்கள்,”ஆகிய ரஜினி படத்தலைப்புகளை வைத்துள்ள படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் படத்தலைப்பை தனது படத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். முன்னதாக 'வேலைக்காரன்' என்ற தலைப்பை இதற்கு முன்பு தன் படத்திற்காக வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் தற்போது நடித்துவரும் படத்திற்கு 'மாவீரன்' எனும் படத்தலைப்பை வைத்திருக்கிறார். ரஜினி படத்தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டது இது 23ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’ஃபகத் ஃபாசில் எனக்கும் மகன் தான்..!’ - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.