ETV Bharat / entertainment

இளையராஜா பாடலைக் கேட்டு கைதட்டி ரசித்த ரஜினி!

author img

By

Published : May 24, 2022, 4:21 PM IST

இசையமைப்பாளர் இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது பாடல்களை கேட்டு கைதட்டி ரசித்தார்.

இளையராஜா பாடலை கேட்டு கைதட்டி ரசித்த ரஜினி!
இளையராஜா பாடலை கேட்டு கைதட்டி ரசித்த ரஜினி!

சென்னை: போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று(மே 24) காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டுப்பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, ”சாமி ஏதாவது வேலை இருக்குதா..?” என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ”என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ஆம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்” என இளையராஜா கூறியுள்ளார்.

‘‘அப்படியா...,நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்துச்சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்துக்கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி, தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்.

இதையும் படிங்க: படப்பிடிப்பின் போது பிரபல நடிகர், நடிகை காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.